MySpace glitters: CoolSpaceTricks.com

Wednesday, June 29, 2011

மார்பக புற்றுநோயை தடுக்கும் சூரிய ஒளி

[ 29 யூன் 2011 ]
தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் பட்டால் மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: சூரிய ஒளி உடல் மேல் படும் போது விட்டமின் D உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை ஒருவித ஹோர்மோனாக மாற்றும் திறன் பெற்றவை. இந்த ஹோர்மோன் தான் மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இளம், நடுத்தர மற்றும் வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் படும் படி பார்த்துக் கொண்டால் மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.

No comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes