| கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை |
| உலகம் முழுவதும் கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. கைத்தொலைபேசியில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதே எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலை குறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்திற்கும் தேவையான ஒரு அடிப்படை விடயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம்மால் சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே மின்சாரத்தை தவிர்த்து ரூபாய் நோட்டு, இலைகள், அரிசி மூலம் போடுவது போன்ற பல செய்திகள் நாம் படித்திருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே என்பதால் இந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன. ஆனால் இப்பொழுது ஜப்பானின் TES New Energy என்ற நிறுவனத்தால் Pan Energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் கைத்தொலைபேசிக்கு சார்ஜ் போட மின்சாரம் தேவையில்லை வெப்பம் இருந்தாலே போதும். சூடான பொருட்கள் மீது இந்த கருவியை வைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கருவி வெப்ப ஆற்றலை நேரடியாக மின்ஆற்றலாக மாற்றி சார்ஜ் செய்கிறது. இந்த கருவி மூலம் கைத்தொலைபேசிகள், MP3 பிளேயர்ஸ், ஐபொட் மற்றும் USB இணைப்பு இருக்கும் எல்லா கருவிகளுக்கும் சார்ஜ் போட முடியும் என்பது இதன் கூடுதல் வசதியாகும். இந்த கருவி ஏற்கனவே ஜப்பானில் விலைக்கு வந்து விட்டது. ஆனால் இதன் விலை $299 மிக அதிகமாக இருப்பதால் இந்த கருவியின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிறுவனம் விலையில் மாற்றம் செய்தால் உலகம் முழுவதும் வீணாக்கப்படும் மின்சாரத்தை சேமிக்கலாம். மின்சாரம் இல்லாமல் சார்ஜ் போட Pan Energy என்ற கருவி மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. Yogen என்ற கருவியும் உள்ளது. இந்த கருவி மூலமும் மின்சாரம் இல்லாமல் 5 அல்லது 10 நிமிடத்தில் சார்ஜ் போட்டு விடலாம் இதன் விலை $45. Pirass |
Saturday, June 25, 2011
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment